உலகின் மிகச்சிறந்த போராளியின் வரலாறு 10,ஒக்டோபர் /26,நவம்பர்:

தோழர் எர்னெஸ்டோ ‘சே குவாரா உலகத்தை விட்டு விடை பெற்ற 49 ஆண்டுகள்

 

சே குவாரா10-10- 1967: பிடல் காஸ்ட்ரோ 26-11-2016 உலகத்தை விட்டு விடை பெற்ற கடைசி நாள்

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாபெரும் உலகத்தலைவன் பிடல் காஸ்ட்ரோ பிடல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் இன்று 26-11-2016 உலகத்தை விட்டு விடை பெற்ற கடைசி நாள்.

 

 
 
 
 
 
தானியா முதன்முதலாக 1960 ஆம் ஆண்டு கிழக்குஜெர்மனிக்கு சே குவேரா
தோழர் எர்னெஸ்டோ ‘சே குவாரா வாழ்க்கை வரலாறு.

மனித குல விடுதலைக்காகத்தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதன் வரலாற்றில்: 09,ஒக்டோபர்1967: 1.10 மணி, அன்று கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் சுட்டுக்கொல்லப்பட்டார் 10,ஒக்டோபர் 1967: உலகத்தை விட்டு விடை பெற்ற கடைசி நாள்.

போராட்ட குணமுள்ள மனிதர்களின் அடையாளம். சே குவேரா  எனும் அற்புத போராளியின் புகழ் அவர் வாழ்ந்த நிலங்களை தாண்டி உலகின் திசையெங்கும் அறியப்பட்ட காரணம் அந்த மகத்தான் மனிதரின் வாழ்க்கையும் அதில் படிந்திருக்கும் ரத்தக் கறையுடனான உண்மைகளும்தான். லத்தீன் அமெரிக்க புரட்சியில் க்யூபாவில் தோழர் பிடல் காஸ்ட்ரோவின் தலைமையை உருவாக்க உருதுணையாக சே குவேரா  ஏந்திய துப்பாக்கியின் தோட்டாக்கள் புரட்சியின் வடிவமாக அவரை உலகிற்கு அடையாளம் காட்டியது. எர்னெஸ்டோ ‘சே  குவேரா – மனிதர்களை பெரும் துயர்களிலிருந்து விடுவிக்க ஆசைப்பட்ட ஒரு மனிதன் – அவரது வாழ்க்கை – அவரது தேடல் – அவரின் பயணம் இது

மனித குல விடுதலைக்காகத்தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதன்  வரலாற்றில்: 09,ஒக்டோபர்,1967: பிற்பகல் 3.30, காலில் குண்டடிபட்ட  நிலையில்  பொலிவிய படையினரால் சே குவேரா கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் 10,ஒக்டோபர் 1967:காலை 10.00,உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏவிடம் இருந்து தகவல் வருகிறது
பிற்பகல் 1.10 மணி உலகத்தை விட்டு  விடை பெற்ற கடைசி நாள் ஒன்பது  தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. கண்கள் திறந்தபடியேதான் அவர் உயிர் அவரை விட்டுப் பிரிந்தது.
 
கியூபாவில் புரட்சி

மருத்துவம் படித்த இவர் டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில் விரும்பினார். ஆனால், காலம் அப்போது அவருக்கு வேறு ஒரு பாடத்தைக் கற்றுத் தந்தது. கௌதமாலா நாட்டில் நடந்து வந்த ஓர் ஆட்சியை அமெரிக்க அராசங்கம் தனது சுயநலத்துக்காக தூக்கி எறிந்தது. இதைப் பார்த்து சே துடித்தார். தங்களின் அரசாங்கம் தூக்கி எறியப்பட்டதைப் பார்த்து மௌனம் சாதித்த அந்த நாட்டு மக்களின் செயல் சே குவேராவை மேலும் துடிதுடிக்க வைத்தது. அமெரிக்காவின் இந்த அட்டூழியத்தை எதிர்த்து அவர் புரட்சி வெடிக்கப் பேச.அவருக்கு வந்தது ஆபத்து. மெக்ஸிகோவுக்குத் தப்பி ஓடினார்.

1902ல் ஸ்பானிய அரசு விரட்டியடிக்கப்பட்டது. நல்லவராக வந்த அமெரிக்காவோ, கியூபாவில் ஒரு மாற்று ஆட்சியை ஏற்படுத்தி, அதன் பொருளாதாரத்தை உறிஞ்ச ஆரம்பித்தது. கடைசியாக கியூபாவை ஆண்ட ஃபெலன்சியா பாடிஸ்டா (Fulgencio batista) ஆட்சியில், இது உச்சக்கட்டமாக நிகழ்ந் தது. மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்தனர். ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிரதிநிதியாக உருவெடுத்தார். அதே வேகத்தில், காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டார். இது புரட்சிக் கனவுகளுக்குப் பேரிடி! ஆயினும், பாடிஸ்டா அரசின் மீதான எதிர்ப்பு காட்டுத் தீயாகப் பரவியது. எங்கே மக்கள் ஒன்றுசேர்ந்து புரட்சி நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம்கொண்ட பாடிஸ்டா அரசு, ஒரு மன்னிப்பின் பேரில் காஸ்ட்ரோவை விடுதலை செய்தது. பலமிழந்த சிங்கமாக காஸ்ட்ரோ வெளியே வந்தார். உடன் போராளிகள் இல்லை. ஆயுதங்கள் இல்லை. அடுத்து என்ன? புரட்சியின் கனவுக்கு முடிவுரை

எழுதப்பட்டுவிட்டதா? என இருந்த காலத்தில்தான் கியூபாவில் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராக கெரில்லா படை திரட்டிப் போராடிவந்த பிடெல் கேஸ்ட்ரோவின் அறிமுகம் கிடைத்தது. அது அற்புதமான நட்பாக மலர்ந்தது. கேஸ்ட்ரோவின் அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. இவரின் வீரமும் கெரில்லாப் படை சாகசங்களும் பாடிஸ்டாவை வீழ்த்தி, கேஸ்ட்ரோவின் கைகளில் க்யூபாவின் ஆட்சியை ஒப்படைத்தன. தலைமைத் தளபதி ஆனார் சே. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். 1959, பிப்ரவரி 16ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன் குவேராவை ஒரு கியூபன் என்று அறிவித்தபிறகு அந்த வருடம் அக்டோபர் மாதம்  தேசிய வங்கியின் அதிபராகவும் ஃபிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்டார். விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் ‘சே’. தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் ‘சே’ என கையெ ழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் 1961ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து கியூபாவின் பொருளாதார அமைச்சர் ஆனார். கியூபாவை பன்னெடுங்காலமாக சுரண்டி வந்த அமெரிக்க நிறுவனங்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்தார். இருந்தாலும் ‘சே’ தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார்.  கியூபாவின் விடுதலைக்காக தன்னோடு போராடிய ஒரு பெண்ணை மணந்து இரு குழந்தைகளையும் பெற்றார். இந்த வாழ்க்கை சேவைக் கவரவில்லை. காரணம் காங்கோ நாட்டில் புரட்சியில் ஈடுபட்டு வந்த கெரில்லாப் போராளிகளின்மீது அவரின் கவனம் சென்றது.  ‘சே’ 1965 மார்ச்சில் கியூபா திரும்பியபோது விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு ‘சே’ நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965ஆம் ஆண்டில் தனது நண்பர் கேஸ்ட்ரோவுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதிவிட்டு கியூபாவில் இருந்து திடீரெனத் தலைமறைவானார், வெளியேறினார். ஒரு சந்திப்பில், காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ (Raul castro) ‘சே’வை  சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது ‘சே’வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் ‘சே’ கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு.   

 

வீர வணக்கம்

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாபெரும் உலகத்தலைவன் பிடல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் இன்று 26-11-2016 காலமானார்.

மனித குல விடுதலைக்காகத்தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதன் தோழர் எர்னெஸ்டோ ‘சே குவாரா10-10- 1967,காலமானார்.

தோழர் எர்னெஸ்டோ ‘சே குவாரா10-10- 1967: உலகத்தை விட்டு விடை பெற்ற கடைசி நாள்

பிடல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் இன்று 26-11-2016 உலகத்தை விட்டு விடை பெற்ற கடைசி நாள்.

இவரககளது மறைவு பொதுவுடைமைவாதிகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்