மாவீரன் நரகாசுரன்

 வீர வரலாறு

நம் தலைவர்களில் ஒருவன் மாவீரன் நரகாசுரன் கொல்லப்பட்ட நாள்

இராவணனுக்கு வீர வணக்கம்

தமிழன்ஒருவன்கொல்லப்பட்டதீபாவளிநாளை தமிழர்களேகொண்டாடுவதா?

தமிழர்அடிமைகள்தினம் இராவணனுக்கு வீர வணக்கம்,

தமிழன்ஒருவன்கொல்லப்பட்டதீபாவளிநாளை
தமிழர்களேகொண்டாடுவதா?
தமிழர்அடிமைகள்தினம் தீபாவளி

இராவணனின் காலத்திலேயே...சகோதர யுத்தம். தமிழன் காலை தமிழன் வாரிவிடல்  தமிழ மக்களைக் குரங்குகள் என்று தமிழ் மன்னனான இராவணனை அரக்கனென்றும் அயோத்தி அரசனான இராமனைக் கடவுள் என்றும் ஈழத்தில்உரிமை கேட்டுப் போராடிய 5 இலட்சம் தமிழர்களைக் கொல்வதற்கும் , 20 இலட்சம் தமிழர்களை உலகெங்கும் அகதிகளாக விரட்டியடிக்கவும் துணை போன ஆரியர்களின் வெற்றியை நாம் கொண்டாடலாமா??
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்.
தமிழர்களை எதிர்ப்பதே , ஒழிப்பதே ஆரியத்தின் குறிக்கோள்.
தமிழர்களை எதிர்ப்பதே , ஒழிப்பதே ஆரியத்தின் குறிக்கோள்.
நம் எதிரி நம்மை அழித்த நாளை நாம் கொண்டாடுவது உலகின் மிகப்பெரிய அடிமைத்தனம்...ஒரு கணம் சிந்தியுங்கள்...
தீபாவளி என்பது ஆரிய பகைவர்கள்., தமிழ் மன்னனான இராவணனை வென்ற நாளையே பட்டாசு கொளுத்தி கொண்டாடும் நாள்...
நம்மை சாதியாக்கி, கூறு போட்டு, அடிமைச் சாதிகளை உருவாக்கி, அவர்களை சுரண்டி வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்கி , மாற்று மதத்தை இம்மண்ணில் வேரூன்ற வைத்து சாதி மதக் கலவரங்களை தூண்டி, நம்மைக் கொல்லும் ஆரியர்களின் வெற்றியை நாம் ஏன் கொண்டாடவேண்டும்???
ஒரிசாவில் இருந்து ஈழத்துக்குவந்த வந்தேறு குடிகளுக்கு, ஆரியத்தின் தேவை, முள்ளி வாய்க்காலோடு முடிவுக்கு வந்து விட்டது!
தமிழர்களின் வரலாற்றினை சிதைப்பதற்கு
வட இந்தியர்களின் தலமையில்பல வகைப்ட்ட வரலாற்று அழிப்பு ஆரம்ப காலங்களிலிருந்தே வந்திருக்கிறது. எல்லாவழிகளிலும் உலகை ஆண்ட மிகப்பெரிய சக்தியாக தமிழினம் இருந்ததனால் அதை அழிப்பதற்கான முயற்சிகள் ஆரம்பங்களில் இருந்து நடந்திருக்கின்றன என்பதை வரலாற்று சிதைப்புகளில் இருந்து நாங்கள் அறிந்து கொள்ளலாம். ஈழத்தை பலமாக வைத்திருந்ததோடு நல்லாட்சியும் புரிந்துவந்தவன்தான் ராவணன். இராவணன்...
  சிங்களத்தின்அடுத்த தேவை, தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு அடையாளத் தேடலாகும்!
இங்கே தான் சிவபக்தனான ராவணன் தேவைப் படுகின்றான் !
 இராவணனில் தொங்குவதன் மூலம், தாங்கள் இலங்கையின் மூத்த குடிகள் என்று நிறுவ முடிவதுடன், ஒரிசாவில் இருந்து துரத்தப்பட்டு வந்தவர்கள் என்ற அடையாளமும் மறக்கப்படலாம்!
 மண்டோதரியின் மீது சேறு பூசுவதற்கான காரணம், மண்டோதரியின் ஆரிய மூலமாக இருக்கலாம்!
அது தவிரவும், நாங்களும் தமிழரும் ஒன்றுக்குள் ஒன்றே என உலகத்துக்குக் காட்டுவதற்காகவும், இராவணனை முன்னிலைப்படுத்தலாம்!
 காலப்போக்கில், சிங்களத்தின் 'இராவண முன்னிலைப்படுத்தலின்' நோக்கம் தெரியவரும்

தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை”” எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாமெழுதிய “மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு”” என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
மகாவம்சத்தையே மாற்றி எழுதி சரித்திரம் படைக்கும் சிங்களம்,தமிழர்களின் சரித்திரத்தையும் மாற்றி எழுத முனைகிறதா? இன்னும் சில காலம் இவர்கள் ஆட்சி நிலைக்குமானானால்,  புத்தர்பிரான் இராமாயணம் எழுதினார் என்பதாக பிள்ளைகள் பாடம் படிக்கும்.

 இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். இதுவும் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்ப்ட்டதாக ஐதீகம்.
இப்போது இருக்கும் லிங்கம் இராவணன் பூஜித்தது இல்லை.


இராவணன் வெட்டு

கோவத்தில் கோவிலுடன் ஒரு சின்ன மலையையும் வெட்டி
பக்கத்திலே இருக்கும் கடலில் போட்டுவிட்டாராம்!! ஏன் இந்த
கோபம்! யார் மேல கோவம்!! 
சிறந்த சிவ பக்தன். அதனால் தான் ஈஸ்வர பட்டம் பெற்றான் இராவணன்.
பார்வதிக்காக ஈசன் வடிவமைத்த இந்த இலங்கையை தனக்கு வேண்டி
இறைவனிடமிருந்து இராவணன் பெற்றதாகவும், அதனால் சினம் கொண்டு
அம்மை அந்த இடத்தில் நிம்மதி இல்லாமல் போகக்கடவதுன்னு சாபம்
இட்டதாலும் அதனால் தான் அங்கே அப்படி ஒரு சூழல் என்றும் சிலர்
சொல்லக் கேள்வி!! கைலயங்கிரியை தன் கட்டைவிரலால் தூக்கி
சிவனையே பயமுறுத்திய வீரன்.

கன்னியா வெந்நீரூற்று,ஈழத்தில்சீதை

கன்னியா வெந்கன்னியா வெந்நீரூற்று
அந்த சிவன் மீதே கோவம் ஏற்பட்டது.
காரணம் இராவணனின் அன்னையார்
இறப்பு. என் தாய் இறக்கலாமா? என கோவப்பட்டு கோவிலை வெட்டி
தூக்கி எறிந்துவிட்டு, அதே அடங்காத கோவத்துடன் வாளால் வெட்டிய
இடங்கள் இன்றும் இராவணன் வெட்டு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
அவை வெந்நீர் கிணறுகளாக மாறிவிட்டன. தன் அன்னைக்கு அங்கேதான்
அந்திமக்கிரியைகளைச் செய்ததாக வாயிலில் இருக்கும் பலகைச் சொல்கிறது.


ஈழத்திலும் மற்றும் வங்காளத்தில் வழங்கப்படும் ராமாயணத்தில், இராவணனைப்பற்றி மிகவும் உயர்வாகக் கூறப்பட்டிருக்கிறது.
இராவணன் மகள்சீதையை எடுத்துச் செல்லவில்லை;
அதற்கு மாறாக, ராமனும், லட்சுமண னும் இராவணன்மகள்சீதையைப் பெருந்தொல்லைக்கு ஆட்படுத்தினார்கள்; ஆகையால்,இராவணன்மகள் சீதை அடைக்கலம் தேடிச் சென்றாள். அவளுக்கு இராவணன் அடைக்கலம் அளித்தான் இராவணன்மகள்சீதை பிறக்க (நாகநாடு / ஈழநாடு அழிய.
(நாகநாடு) / ஈழநாடு இல் இராவணன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருந்தான். காரணம், அவனுக்குப் பெண் குழந்தைபிறந்ததால் அந்தக் கோலாகலம்! பிறந்த பெண் குழந்தையின் எதிர்காலம் எப்படியிருக்கும்? நாட்டிலுள்ளசோதிடக் கலை நிபுணர்களை வரவழைத்தான். சோதிடர்கள் உற்சாகமாக பெண் குழந்தையின் சாதகத்தைகணிப்பதில் ஈடுபட்டனர். தாங்கள் சோதிடப் பலன் சொல்லியானதும் பொன்னும் பொருளும்பெறப்போகிறோமென்று ஏகமான கற்பனையில் பலாபலன்களைக் கணிப்பதில் சோதிடத் திலகங்கள்மாளிகையையே அல்லோலகல்லோலப் படுத்திக் கொண்டிருந்தனர்.வந்திருந்த சோதிடர்கள் கட்டுக்கட்டாக வைத்திருந்த ஏடுகளைப் புரட்டினர். நேரம் ஆக,ஆக சோதிடர்களின் முகங்கள் உற்சாகம் குன்றி வாட்டமுறத் துவங்கியது.தாங்கள் போடுகிற கணிதத்தில் பிழை ஏதும் நேர்ந்திருக்குமோ என்று மண்டையை உடைத்துக் கொண்டுஆராய்ந்தனர். ஆனாலும், ஒருவரா, இருவரா? சோதிடப் படையே அங்கிருக்க, அவர்களனைவருக்குமே எப்படிக்கணக்குப் பிசகும். கணிதப் பிழை என்று சொன்னால், இராவணன் சும்மா விட்டுவிடுவானா? இல்லை, இதுதான் உண்மை என்று சொன்னால் இராவணன் கண் இமைக்கும் நேரத்துக்குள் அத்தனை சோதிடர்களின் தலையையும் கொய்து போட்டு விடுவானே! சோதிடர்கள், நெடுநேரம் கூடிக்கூடிப் பேசினர். சோதிடம் பார்க்க வந்த சோதிடர்கள், தங்கள் போதாத நேரம் இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே, என்று வேர்க்க விறுவிறுக்க, இராவணனிடம் யார்? எப்படிச் சொல்வது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது, இராவணன் தனது கொடுவாள் மீசையை நீவி விட்டுக் கொண்டே அங்கே வருகிறான். " சோதிடத்திலகங்களே, என்ன பலன் கண்டீர்கள்? என் மகள் எதிர்காலம் எப்படி என்று கணித்ததைச் சொல்லுங்கள்.ஆனந்தமாகக் கேட்கக் காத்திருக்கிறேன், " என்று சொல்லி அங்கிருந்த ஆசனத்தில் அமருகிறான்.சோதிடர்கள் ஒன்றும் பேசாது வாடிய முகத்தோடு, செழித்திருக்கும் வாழை குலை தள்ளி அதன் பாரம் தாளாமல்தொங்கிக் கொண்டிருக்கும் வாழைக் குலை போல சோதிடர்கள் அத்தனை பேர் தலையும் தொங்கிப்போயிருப்பதை இராவணன் பார்க்கிறான். ஏன்? என்னாயிற்று உங்களுக்கு? வாடிய உங்கள் முகம் ஏதோ சொல்லக்கூடாத சங்கதியை தேக்கி வைத்திருப்பதைக் காண்கிறேன். ஏதாக இருந்தாலும் சொல்லுங்கள் என்று இராவணன் இரைந்து கத்துகிறான்.தலைமைச் சோதிடர் மெல்ல இராவணன் முன் வந்து வணங்கி, தங்கள்.... மகள்..... பிறந்த....நேரம்..... இலங்கை..... அழியப் போகிறது, " என்று உடைந்த குரலில் சொல்லி முடித்தார். என்ன? என் மகள் பிறக்க  ஈழநாடுஅழியுமா? என்ன சொல்கிறீர்கள்? கண்கள் சிவக்கக் கேட்டான்.ஆமாம். இந்தப் பெண் குழந்தையால், உங்களுக்கும் ஆபத்து காத்திருக்கிறது, இலங்கை அழியும், அரசே என்றார் சோதிடர். ம்ம்... என்ன செய்யலாம்... சொல்லுங்கள்? " இந்தக் குழந்தையைக் கொன்று விட வேண்டும், அரசே! " மென்று விழுங்கிச் சொல்லிவிட்டார் சோதிடர். அப்படியா? " வேறு வழியே இல்லையா? " குழந்தை உயிரோடிருந்தால் பின்னாளில் ....!? சோதிடரே! குழந்தையைக் கொல்வதைத் தவிர வேறு எதாவது சொல்லுங்கள்...?" வேறு நாட்டிற்கு அனுப்பிவிடலாம்....இங்கிருந்தால்தான் ஆபத்து அரசே...."சோதிடர்கள் ஆலோசனைப்படி தன் மகளைத் தொட்டில் ஒன்றில் வைத்து பாதுகாப்பாக ஓடம் ஒன்றிலேற்றிக் கடலில் விட்டான், இராவணன். வருடங்கள் உருண்டோட இராவணன் நிம்மதியாக இருந்தான். மகளால் இனிஅழிவு ஏற்பட வழியில்லை, என்று மனதைத் தேற்றிக் கொண்டான் இராவணன். ஆனால், விதி விளையாடியது!கடலில் சென்ற இராவணன் மகள் சனகனது நாட்டில் ஒதுங்கி சனக மகாராசாவால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள். சனகன் தன் மகளாகவே பாவித்து சீதா என்று பெயரிட்டு வளர்த்தான். பின்னர் இராமனை மணந்து வனவாசம் சென்றாள். 


 

சிவதாசனே இராவணன் என்ற இராவணன்

(சிவதாசன்) இராவணன் காலத்து ஆலயங்கள், சில வரலாற்று எச்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். இராவணன் காலத்து ஆலயங்கள் என்று குறிப்பிடுவதனால் அவை இராவணனால் கட்டப்பட்டன என்று பொருள் இல்லை. திரு+கோணமலை>திருக்கோணமலை கன்னியா வெந்நீரூற்று திருக்கோணேச்சரம் ,இராவணன் வெட்டு , இது திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. . இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.> இராவணனின் பிள்ளைப் பெயர் சிவதாசன்> சிவ> சிவதாசன் (இராவணன்), சிவன். சிவலிங்கம்?????? திரு+கோணமலை>திருக்கோணமலை> திரு+மலை+ திரு.இராவணன்.+ திரு+நீறு.= இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு தமிழர்களின் வரலாற்று அழிப்பது அறுப்பது நீறு  தமிழர்களின் வரலாற்று அழிப்பு இராமன், இராவணனை அழித்து விட்டு, தனது ... வடஇந்தியாவில் மகாபலி தீபம், நரக சதுர்த்தசி, பூஜை, தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். தமிழர்களின் வரலாற்றினை சிதைப்பதற்கு வட இந்தியர்களின் தலமையில் பல வகைப்ட்ட வரலாற்று அழிப்பு ஆரம்ப காலங்களிலிருந்தே, சிவதாசன்(சிவதாசன்.வச்சிரவா) என்ற இராவணன் என்பவர் ஈழத்தை ஆட்சி செய்த தமிழ் அரசரும்  இராவண காவியத்தின் காப்பியத் தலைவனும் ஆவார். இராவணன், நரகாசுரன், தசக்கிரீவன், இலங்கேஸ்வரர், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பலபெயர்களின் இராவணன் அழைக்கப்பெறுகிறார். பத்துதலைஅல்ல பத்துஉருவம் பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்

அசுரன். 1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார். என்று எழுதிய உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். இக்கதை எழுதின காலத்தில் பார்ப்பனர்கள் (ஆரியர்) எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்கவேண்டும். அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும்

பூமி தட்டையா? உருண்டையா?

தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவ னால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?

சுருட்டினால் தூக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்துப் போக முடியுமா?

எங்கிருந்து தூக்குவது?

கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?

விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன?

அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால், பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா?

மனித உருவுக்கும், மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது தீபாவளி கொண்டாடும் - தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா? சிந்தியுங்கள். சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லு கிறேன் என்றால்,

தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர் களுக்குப் புராணம் கூறும்  நரகாசுரன் ஊர்  பூமிகூடத் தெரியவில்லை .